சிட்னி ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 12ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்வென் ஜாங்குடன் மோதினார். இதில் முதல் செட்டை 12-21 என சிந்து இழந்தார். 2வது செட்டையும் 17-21 என பறிகொடுத்து தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.