லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14 அல்லது 15ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. இதனிடையே உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினரின் பரிந்துரை படி, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரவேண்டுமெனில் எழுத்து பூர்வமான பாதுகாப்பு உத்தரவாதத்தை பிசிசிஐ மற்றும் ஐசிசி வழங்கவேண்டும் என பாகிஸ்தான் அரசு கோரியுள்ளது.