* ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முன்னாள் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (36 வயது), அடுத்த வாரம் நடக்க உள்ள ஷெஃபீல்டு ஷீல்டு தொடரின் இறுதிப் போட்டியுடன் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
* டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தென் ஆப்ரிக்க வேகம் லுங்கி என்ஜிடிக்கு பதிலாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜேக் பிரேசர் மெக்கர்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
* ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒவ்வொரு ஓவருக்கும் இடையே எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை கணக்கிடுவதற்காக ‘ஸ்டாப் வாட்ச்’ பயன்படுத்தும் முறை இனி நிரந்தரமாகத் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.
* காயம் காரணமாக ஓய்வில் இருந்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், அயர்லாந்து அணியுடன் ஷார்ஜாவில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக மீண்டும் களத்துக்கு திரும்பினார்.