சென்னை: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை மக்கள் அறிவர். நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.