Saturday, July 27, 2024
Home » ஊட்டியில் பூத்துக்குலுங்கும் ரெட் லீப் மலர்கள்

ஊட்டியில் பூத்துக்குலுங்கும் ரெட் லீப் மலர்கள்

by Mahaprabhu

ஊட்டி: ஊட்டி-அணிக்கொரை சாலையில் பூத்துக்குலுங்கும் ரெட் லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இவைகளில் பல்வேறு வகையான மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான காட்டுச் செடிகளில் மலர்கள் பூத்து அவ்வப்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

குறிப்பாக, சில மரங்களில் பூக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஜெகரண்டா, செர்ரி, பிளேம் ஆப் தி பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள் மற்றும் ரெட் லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களில் சிவப்பு இலைகள் கொண்ட ரெட் லீப் மலர்கள் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டியில் இருந்து அணிக்கொரை செல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் அதிகளவில் பூத்துக்குலுங்குகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi