சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.118க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Mahaprabhu
சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற பெண் பலி
சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் உடன் சென்ற தோழி காயம் அடைந்துள்ளார். சென்னீர்குப்பம் அருகே வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பியூலா மருத்தவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குளோரி மேல்சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
காலையில் ரூ.1,320, தற்போது ரூ.1,040: ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை
சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. காலையில் ரூ.1,320 குறைந்த தங்கம் விலை தற்போது மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போரில் பல புதிய யுக்திகளை பாகிஸ்தான் கையாண்டது, ஆனால் நாம் அதை முறியடித்தோம்: முப்படை அதிகாரிகள் விளக்கம்
டெல்லி: போரில் பல புதிய யுக்திகளை பாகிஸ்தான் கையாண்டது, ஆனால் நாம் அதை முறியடித்தோம் என முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய 11 விமானப்படை தளங்களை இந்திய விமானங்கள் தாக்கின. சீனாவின் PL-15E ரக ஏவுகணைகளை இந்திய படைகள் சிதறிடித்தன. சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கைக்கொடுக்கவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியாவுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை எனவும் முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது: ஏர் மார்ஷல் பேட்டி
டெல்லி: தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது என ஏர் மார்ஷல் பேட்டி அளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் முப்படைகளின் தலைமை இயக்குநர்கள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தந்தபோதும் அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்னையாக மாற்றுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் இந்தியாவிற்கு சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக விளங்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்
சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை. இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி
சென்னை: அண்ணா பல்கலை. இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்து அரியர் பாடங்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்.- மே, ஜூன் – ஜூலை பருவ தேர்வுகளின்போது அரியர் மாணவர்கள் தேர்வெழுதலாம் என பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலம் தம்பதி கொலை வழக்கில் 5 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 5 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலத்தில் முதியவர் பாஸ்கரன், அவரது மனைவி வித்யா ஆகியோர் நேற்று கொலை செய்யப்பட்டனர்.
சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் ரயில் மோதி உயிரிழப்பு
சென்னை: சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். எழும்பூரில் இருந்து வந்துகொண்டிருந்த மெழு ரயில் மோதி முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்துள்ளனர்.