புதுடெல்லி: ஒன்றிய அரசு உயர் பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக தனியார் துறையை சேர்ந்த நிபுணர்கள் 10 பேருக்கு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2021ல் 31 பதவிகளுக்கு இதே போல் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தனியார் துறையை சேர்ந்த 20 நிபுணர்களை இணை செயலாளர், இயக்குனர்கள், துணை செயலாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.