சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீன் மார்க்கெட்டுகள் மற்றும் இறைச்சிக் கடைகள், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள், சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட 2,891 கடைகளில் மாநிலம் முழுவதும் உள்ள சட்டமுறை எடையளவு அதிகாரிகளால் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 775 விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேற்படியான விதிமீறல்களுக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் ஆய்வுகளின் போது காணப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் என்று வணிகர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இத்தகவல்களை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.