சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: ஜூன், ஜூலை மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான நாட்களிலும் சிறப்பு அனுமதித் திட்டத்தில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான நாட்களிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.