உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐதரபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 344 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.