அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேஸ் பல்கலைக்கழகம் அருகே மான்ஹாட்டன் பகுதியில் 4 தளங்கள் கொண்ட கட்டிடத்தில், கார்களை வரிசையாக நிறுத்தும் பார்க்கிங் பகுதி அமைந்து உள்ளது.இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து உள்ளது. அது கீழ் தளத்தின் மீது விழுந்ததில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சிறிய மற்றும் பெரிய ரக கார்கள் என ஒன்றன் மீது ஒன்று விழுந்து உள்ளன.இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.