Friday, May 17, 2024
Home » மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தமிழக பயணி மாரடைப்பால் பலி

மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தமிழக பயணி மாரடைப்பால் பலி

by Suresh

மீனம்பாக்கம்: மஸ்கட்டில் இருந்து இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 168 பயணிகளுடன் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறங்கினர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பயணி தனசேகரன் (38) கீழே இறங்காமல், இருக்கையிலேயே தலை சாய்த்து தூங்குவது போல் அமர்ந்திருந்தார். அவரை விமான பணிப்பெண்கள் தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை.சென்னை விமானநிலைய மருத்துவ குழுவினர் தனசேகரனை சோதனை செய்தனர்.அவர் திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பினால் இறந்துபோனதாக டாக்டர்கள் அறிவித்தனர். சிவகங்கையில் உள்ள தனசேகரனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi