Thursday, May 16, 2024
Home » கோஹ்லி பொறுப்பான ஆட்டம் இந்தியா வலுவான முன்னிலை

கோஹ்லி பொறுப்பான ஆட்டம் இந்தியா வலுவான முன்னிலை

by Francis

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், கோஹ்லியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. அஷ்வின் 5, ஜடேஜா 3, சிராஜ், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் 103, கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 143 ரன், கோஹ்லி 36 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 171 ரன் (387 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), ரகானே 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 141 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 393 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி 66 ரன், ஜடேஜா 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

You may also like

Leave a Comment

sixteen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi