சென்னை: ஜூன் 21ம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 11வது சர்வதேச யோகா தினம். இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா’. இந்த ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள் உட்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக இணையவழி சேவையை தொடங்கியுள்ளது. யோகா பயிற்சிக்கான முனைய மையங்களாக பணியாற்ற விரும்பும் மையங்கள், நிறுவனங்கள், பங்கேற்பாளர் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
தனிப்பட்ட யோகா ஆர்வலர்கள் இணையவழி வாயிலாக பங்கேற்பாளர் முனையம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். சிறப்பாகச் செயல்படும் முனைய மையங்கள், நிபுணர்கள் அடங்கிய ஒரு தனிப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு ஆளுநரால் பாராட்டப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://events.annauniv.edu/ இணையதள பக்கத்தில் சென்று தங்களை இணைத்துக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 91-7010257955, 044-22357343, 044-22351313 எண்களை தொடர்பு கொள்ளலாம்.