டெல்லி கார் வெடிப்பு.. காயமடைந்தவர்களை பிரதமர் மோடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல்!!
டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்...
இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!!
சென்னை: இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் 2012 ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி 2 படத்தை, பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். நவம்பர் 14ம் தேதி வெளியாக...
வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் தொடக்கம்..!!
வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. வெள்ளி நகைக்கடன் விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் மீது மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் வெள்ளி கட்டிகள் மீது வழங்கப்படாது...
திருப்புவனம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
சென்னை: திருப்புவனம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25) என்பவர் தனது மனைவி சத்யா (வயது 20) மகன் அஸ்வந்த் (வயது...
‘உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்’ – ரோஹித், விராட் கோலிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்!!
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா...
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக பயிற்சிகள் வழங்க திட்டம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனமானது கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. 2025-26ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதை கருத்தில் கொண்டு, 42,000 இளைஞர்களுக்கு திறன்...
இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 9வது இடம்!!
டெல்லி: இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில் ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், 'பருவநிலை அபாய குறியீடு 2026' எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,...
டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய புலனாய்வு முகமை
டெல்லி : டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய புலனாய்வு முகமை. டெல்லி செங்கோட்டை அருகே நவ. 10(திங்கள்கிழமை) மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும்...
ஒவ்வொரு ஆண்டும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!!
சென்னை : யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில்...
