சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,120க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,120க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு...

ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய கனடா.!!

கீவ்: ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்கு, கனடா உதவிக்கரம் நீட்ட உள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நிதி உதவி திட்டத்திற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 350 மில்லியன் கனேடிய டாலர் (சுமார் 253 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ராணுவ உதவித் திட்டத்தை வழங்க கனடா...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,250 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. நீர் வரத்து சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 12,000...

கேளம்பாக்கம் புறவழிச்சாலையில் முள் செடிகள் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர், செப்.11: கேளம்பாக்கம் மற்றும் படூர் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ஓ.எம்.ஆர். சாலையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்வோரும், திருப்போரூர் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்வோரும் இந்த புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கேளம்பாக்கம்,...

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி துறை உதவி ஆணையர் கைது!

தாம்பரம், செப்.11: தாம்பரம் அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ‘கலைமணி அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு தாம்பரம் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஜிஎஸ்டி டிஆர்சி-1 தொடர்பான முரண்பாட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த அறிவிப்பு தொடர்பாக உரிய பதில் மற்றும் விளக்கங்களை சிவக்குமார் தாம்பரம் வணிகவரித்துறை அலுவலகத்தில்...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாவிட்டால் 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மதுராந்தகம், செப்.11: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்தும், அடையாள அட்டை இல்லாவிட்டால் அதற்கு பதில் 14 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள...

காட்பாடி அருகே கட்டப்பட்டு வரும் தேவாலய மேற்கூரை இடிந்து 3 தொழிலாளிகள் பலி

பொன்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மந்தி கிருஷ்ணாபுரம் ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் புதிய தேவாலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை தேவாலயத்தின் மேற்கூரை கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இதில் பெங்களூரை சேர்ந்த 15 தொழிலாளர்கள் மற்றும் 20 தமிழக தொழிலாளிகள் என 35 பேர் ஈடுபட்டனர்....

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 6.10.2026 அன்று நடைபெற உள்ள செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் (தனி)...

மிசா சிறைவாசம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டது திமுக வரலாற்றில் நிலைத்து நிற்கும் தியாகத்தை கேலி செய்வதா? கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் அநாகரிக சாக்கடையிலேயே தவெக மூழ்கும்: திமுக ஐடி விங் சரமாரி பதிலடி

சென்னை: ஏமர்ஜென்சி காலத்துக்கு மிசா சிறைவாசம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நிற்கும் தியாகத்தை கேலி செய்வதா என்றும், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும் என்று திமுக ஐடி விங் சரமாரி பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டசபையில்...

பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

  அண்ணாநகர்: சென்னை முகப்பேர் 2வது பிரதான சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆய்வாளராக பெண் பணியாற்றி வருகிறார்.‌ இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆய்வாளர் சவுரவ், தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார்....