கியா நிறுவனம், புதிய வாகன குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி என்சிஆர், மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 24 முதல் 60 மாதங்களுக்கு குத்தகை திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பலன் அடையலாம். குறைந்த பட்ச தொகையாக கியா சோனட்டை மாதம் ரூ.21,900க்கு குத்தகை எடுத்து பயன்படுத்தலாம். அடுத்ததாக செல்டாஸ் ரூ.28,900, கேரன்ஸ் ரூ.28,800 என மாத குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகன மாடலுக்கு ஏற்ப குத்தகை தொகை மாறுபடலாம்.
கியா நிறுவனம்
191
previous post