ஆடி இந்தியா நிறுவனம் ஆடி கியூ3 போல்ட் மற்றும் ஆடி கியூ 3 ஸ்போர்ட் பேக் போல்ட் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. கருப்பு ஸ்பைலிங் பேக்கேஜ், டூயல் டோன் பெயிண்டுகள், கருப்பு நிறத்தில் ஆடி லோகோ, மேம்படுத்தப்பட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கார்களில் கியூ3 ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் பேக் எடிஷன்களில் உள்ளது போன்று 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜிங், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடி சவுண்ட் டிஸ்டம் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக ஆடி கியூ3 போல்ட் எடிஷன் சுமார் ரூ.54,65,000 எனவும், ஆடி கியூ 3 ஸ்போர்ட்பேக் போல்டு எடிஷன் ரூ.55,71,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் ஆடி கியூ3 போல்ட்
previous post