ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுனம், கிராண்ட் ஐ10 நியாஸ் கார்ப்பொரேட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்மிஷன் வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இந்தக் காருக்கு 3 ஆண்டு வாரண்டியை இந்த நிறுவனம் வழங்குகிறது. 7 ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம். எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல ஸ்டீல் அலாய் வீல்கள், 6.7 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 3.5 அங்குல ஸ்பீடோ மீட்டர், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, 6 ஏர் பேக்குகள், உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஸ்பெஷல் எடிஷன் பெயருக்கேற்ப கார்ப்பொரேட் பேட்ச் பொறிக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ₹6.93 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.