கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 110 மீ. தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டு வீரர் விஷ்ணு தங்கம் வென்றார். மராட்டிய வீரர் சந்தீப் வெள்ளியும், கேரள வீரர் கிரண் வெண்கலப் பதக்கமும் வென்றனர். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரண் தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் பந்தய தூரத்தை 48.42 வினாடிகளில் கடந்து சரண் தங்கப் பதக்கம் வென்றார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி இன்று ஒரேநாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றது.