நிசான் நிறுவனம் மேக்னைட் டர்போ கெசா என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 152 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், கைடுலைன் உடன் கூடிய ரியர் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங், கெசா எடிஷன் பேச் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் சிவிடி இன்ஜின் வேரியண்டில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிஷன் கிடைக்கும். இதுதவிர ஸ்டாண்டர்டு எடிஷனில் 5 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்டும் உள்ளது.
நிசான் மேக்னைட் கெசா டர்போ
102