உலக நாடுகள் பங்கேற்கும் புகழ் பெற்ற யூரோ விஷன் பாட்டு போட்டி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நீலபச்சை வண்ண கம்பள வரவேற்புடன் தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசை குழுவினரின் பிறப்பிடமான லிவர்பூல் நகரின் இசையால் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் யூரோ விஷன் 67-வது பாடல் போட்டி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு யூரோ விஷன் போட்டியின் வெற்றியாளரின் சொந்த நாடான உக்ரைனில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி போர் காரணமாக இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் உக்ரைன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக 3 போட்டிகள் நடைபெறுகின்றன.