பெங்களூரு : கர்நாடக பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஈஸ்வரப்பா மீது தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஈஸ்வரப்பா பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக மனு அளித்துள்ளது. பாஜக வேட்பாளர் மோடியின் புகைப்படத்தை சுயேச்சை வேட்பாளரான ஈஸ்வரப்பா பயன்படுத்த அனுமதிக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.