ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு காவல்துறையினர் பொது பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டதுடன் கடற்கரைகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.













