கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அடுத்த மாதம் இலங்கை வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகிறது. இந்த 3 போட்டிகளும் காலே சர்வதேச மைதானத்தில் ஜூன் 15-21ல் நடைபெற உள்ளன.
அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்தும். இந்த போட்டிகள் அம்பாந்தோட்டை மைதானத்தில் (ஜூன் 24-28) நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த டி20 தொடர், இலங்கையில் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான பயிற்சியாக அமையும்.