தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரங்களில் வெளியில் உறங்கவோ, கால்நடைகளை வெளியில் கட்டி வைக்கவோ வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க பாலக்கோடு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கிராமம் தோறும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.