டெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 2-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 83 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஜலர்பதான் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. சதிஷ் புனியா அம்பெர் தொகுதியிலும், ராஜேந்திர ரத்தோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நாக்பூரிலும் போட்டியிடுகின்றனர்.