தர்மசாலா: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.