Friday, February 23, 2024
Home » 2014 – 2024 இடையிலான காங்கிரஸ் – பாஜக அரசுகளின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல்?: கூட்டத் தொடர் ஒரு நாள் நீடித்த நிலையில் அரசியல் பரபரப்பு

2014 – 2024 இடையிலான காங்கிரஸ் – பாஜக அரசுகளின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல்?: கூட்டத் தொடர் ஒரு நாள் நீடித்த நிலையில் அரசியல் பரபரப்பு

by Suresh

புதுடெல்லி: கடந்த 2014 முதல் 2024 இடையிலான காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளின் தலா 10 ஆண்டுகளின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்காக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒரு நாள் நீடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. 2ம் நாளான கடந்த 1ம் தேதி, நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், பட்ெஜட் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் (பிப். 9) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வரை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘கடந்த 2014ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு முன்னரும், பின்னரும் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும்’ என்று தெரிவித்தார். பொதுவாக வாரயிறுதி நாள்களில், நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. எனவே அன்றைய தினம் 2014ம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் இருந்த பொருளாதார நிலை குறித்தும், அதற்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பொருளாதாரத்தின் நிலையை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நாடாளுமன்ற செயலக வட்டாரங்கள் கூறுகையில், ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையானது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். அன்றைய நிகழ்ச்சி நிரலில், எவ்வித விவாதமும் இருக்காது. இதுகுறித்த நிகழ்ச்சி நிரல்கள் முடிவு செய்யப்படவில்லை’ என்று கூறின. முன்னதாக நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில், ‘எங்களது ஆட்சியானது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உலகளவில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளோம். அதனை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம்’ என்றார்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi