Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் தொடர்புடைய 31 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 22 வழக்குகளில் தொடர்புடைய 31 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். 4 சவரன் தங்க நகைகள், 4 செல்போன்கள், பணம் ரூ.9,22,450/-, 1 சைக்கிள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 லாரி பறிமுதல் செய்யபட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO - Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 21.03.2024 முதல் 27.03.2024 வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 16 வழக்குகளில் தொடர்புடைய 4 இளஞ்சிறார்கள் உட்பட 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள்,4 செல்போன்கள், ரொக்கம் ரூ.9,22,450/-, 1 சைக்கிள், 27 கிலோ ஒயர்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பான 6 வழக்குகளில் தொடர்புடைய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 27.03.2024 வரை, திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் கைது செய்யப்பட்ட 50 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் 21.03.2024 முதல் 27.03.2024 வரை 5 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு, தங்கச்சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.