ஹூண்டாய் ஐ20 எரா
ஹூண்டாய் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஐ20 எரா வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.2 லிட்டர் என்ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 88 எச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதில்...
யமஹா நிறுவனம், இசி-06
யமஹா நிறுவனம், இசி-06 என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. பெங்களூருவை சேர்ந்த ரிவர் இண்டி ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது....
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 140வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எஸ் கிளாஸ் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4.0 வி8 எம்177 இவோ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. யூரோ 7 சுற்றுச்சூழல் தர நிலைகளுக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 537 எச்பி பவரையும் 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வெளிப்படுத்தும்....
பேயான் என் லைன் கார் அறிமுகம்!
ஹூண்டாய் நிறுவனம், பேயான் என் லைன் என்ற காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில், முன்புற பம்பர்கள், கிரில்கள், ஏர் டாம் ஆகியவை புதிய வடிவமைப்பில் இடம் பெற்றுள்ளன. எல்டி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள் உள்ளதாக கூறப்படுகிறது....
ஜீப் நிறுவனத்தின் புதிய எஸ்யுவியை அறிமுகம்!
ஜீப் நிறுவனம் புதிய எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தவும், தற்போதைய வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடனும் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் 2.0 என்ற உத்தியின் கீழ், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய...
மீண்டும் ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் இந்தியா நிறுவனம், புதிய ரெனால்ட் டஸ்டர் காரை இந்தியச் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ரெனால்ட் குழுமத்தின் சர்வதேச கேம்-ப்ளான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தயாரிப்பு இது. இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. 90 சதவீத பாகங்கள் இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன. இது, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.3 லிட்டர் டர்போ...
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 30
பிஎம்டபிள்யூ நிறுவனம், எக்ஸ்3 30 எக்ஸ் டிரைவ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ காரை இந்தியச் சந்தையில் வரும் 16ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தள்ளது. இதில் 2 லிட்டர் டிவின் டர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் எனவும், இது அதிகபட்சமாக 255 எச்பி பவரை வெளிப்பத்தும், 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக்...
கேடிஎம் 390 அட்வன்சர் ஆர்
கேடிஎம் இந்தியா நிறுவனம் 390 அட்வஞ்சர் ஆர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 399 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. என்டியூரா...
போக்ஸ்வேகன் நிறுவனம் டைரான் ஆர்-லைன் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்கிறது!!
போக்ஸ்வேகன் நிறுவனம் டைரான் ஆர்-லைன் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்கிறது. ஸ்போர்ட்டியான, பிரீமியம் வேரியண்டாக வரும் இந்த எஸ்யுவியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பெரிய கருப்பு நிற கிரில்கள் மற்றும் குரோம் பூச்சுக்கள், ஸ்போர்ட்டியான தோற்றத்தில் பம்பர்கள், பளபளப்பான கருப்பு நிறத்தில் பக்கவாட்டு ஸ்கிர்ட்கள், ஆர்லைன் பேட்ச், 19 அங்குல அலாய் வீல்கள், எல்இடி மேட்ரிக்ஸ்...

