மசெராட்டி நிறுவனம் கிரான்கார்பியோ ஃபோல்க்ளோர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 761 எச்பி பவரையும், 1350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மணிக்கு 100 கி.மீ வேகத்தை 2.8 நொடிகளில் எட்டும். இதில் 83 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 447 கி.மீ தூரம் வரை செல்லும்.