டிரையம்ப் இந்தியா நிறுவனம், 2024ம் ஆண்டுக்கான டிரையம்ப் டிகர் 900 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜிடி மற்றும் ராலி புரோ என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. 3 சிலிண்டர் இன்லைன் 888 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்-ல் 106.5 பிஎச்பி பவரையும், 6,850 ஆர்பிஎம்-ல் 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ராலி புரோவில் குவிக் ஷிப்டர் இடம் பெற்றுள்ளது. ஜிடியில் குவிக் ஷிப்டர் இல்லை.இரண்டிலுமே 7 அங்குல டிஎப்டி டிஸ்பிளே,புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் எச்சரிக்கை விளக்குகள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக டிகர் 900 ஜிடி சுமார் ரூ.13.95 லட்சம் எனவும், ராலி புரோ சுமார் ரூ.15.95 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.