Friday, May 3, 2024
Home » ஆன்மீகம் பிட்ஸ்: மண்டப தூணில் கதை

ஆன்மீகம் பிட்ஸ்: மண்டப தூணில் கதை

by Kalaivani Saravanan
Published: Last Updated on

காசினி: பிரம்மமூர்த்தகுமாரன் மாரீசி மகன் காசிபர். இவன் தட்சனின் 13 பெண்களை மணந்தான். அவர்கள் மூலம் ஊர்வன, பறப்பன, தேவர், மனிதர், இராட்சதரை படைத்து உலகை மேம்படுத்தியதால் பூமிக்கு காசினி என்று பெயர்.

சித்தீஸ்வரம்: காஞ்சி காமராஜ் சாலை, கிழக்கு கருவறை 8 அடி உயரம் 12 அடி சுற்றளவு பெரிய லிங்கம் ஆவுடையார் இல்லை ருத்திர பாகம் சுயம்புலிங்கம். இது இடிகல்லால் ஆனது.

தேர் வடிவ ஸ்ரீவிமானம்: கடம்பூர், குடந்தை நாத நாதசுவாமி (நடராஜர் சந்நதி) சென்னை நங்கநல்லூர் (அர்த்தநாரீஸ்வரர்) ஆலயம் துர்க்கை சந்நதி).

ரோமசரிஷி: புகண்டரிஷி மகன் வைத்திய நூல் எழுதினார். உடலில் 31/2 கோடி முடி உள்ளது. 1 முடி உதிர்ந்தால் 1 பிரம்மன் ஆயுள் முடியும். திருஒற்றியூர், சீர்காழி, திருவிடைமருதூரில் வழிபட்டார்.

திருமழபாடி: வஸ்ரதம் பேசுவரர் ஆலயம் சோமாஸ் கந்தருக்கு 2 தனி சந்நதி உள்ளன. 1-ல் பெரிய கருங்கல் திருமேனியாக பெரிய பிரபையுடன் ஒற்றைகல்லால் செய்யப்பட்டுள்ளது. (சோழமண்டலத்தில் வேறு இல்லை).

திருவீழிமிழலை: ஈசன் சக்கரதானர். சக்கிரதியாகர் வலது பாதத்தில் சக்கர ரேகைகளும், மேற்புரத்தில் திருமால் இடந்து இட்ட திருக்கண் உள்ளது. திருவதிகையிலும் திருமால் சிவனை ஆராதித்து சக்கராயுதம் பெற்றார்-புராணம்.

மண்டப தூணில் கதை: காஞ்சி ஏகாம்பரர் 16 கால் தூணில் மும்புரம் எரித்தல், எமனை உதைத்தால், யானையை உரித்தல் கதை, தாராசுரம்-ஐராவதேஸ்வரர், முருகன் திருமணம், மார்க்கண்டேயன் கதை, தாருகாவனத்து ரிஷிகள் கர்வ பங்கம் கதை.

ஸ்ரீபலி: நாள்தோறும் நண்பகலிலும் இரவிலும் சிவபெருமான் உமாதேவியருடன் எழுந்தருளி பத்து திசை பாலகர்க்கும் அவர்தம் கடமையை உணர்த்தி உலகிற்குப் படியளக்கும் நிகழ்ச்சிக்கு ஸ்ரீபலி என்று பெயர், எழுந்தருளும் நாயகர் ஸ்ரீபலிநாயகர் (அ) சந்திரசேகரர்.

இந்திரஞாலத்தேர்: சிவன் சூரபத்மனுக்கு அளிக்கப்பட்ட தேர். இது மாயம்வல்லது நினைத்தபடி இயங்குவது. போரில் அவுணர்களை உயிர்ப்பிக்க அமுத சீதமந்திரமலையைக் கொண்டு வந்து உயிரூட்டியது. முருகன் இத்தேரைக் கைப்பற்றி ஏற்றுக்கொண்டார்.

திருமறைக்காடு: 4 வேதங்களும் மனித வடிவுடன் சிவனை துதித்து வழிபட்டது. வழிபட்டபின் கதவை மூடி சென்றன. திருநாவுக்கரசு அதை பாடி திறந்தும் சம்பந்தர் மூடவும் செய்தார். காஞ்சி ஏகாம்பரர் ஆலய மாமரமும், குற்றால பலாமரமும் வேத வடிவம்.

தொகுப்பு: அருள்ஜோதி

You may also like

Leave a Comment

15 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi