Saturday, July 27, 2024
Home » சரும வனப்பை அள்ளித் தரும் வெண்ணெய்!

சரும வனப்பை அள்ளித் தரும் வெண்ணெய்!

by Porselvi

வெண்ணெய் சமையலுக்கு பயன்படும் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு இயற்கை அழகு சாதனப் பொருள் என எவ்வளவு பேருக்கு தெரியும்? முகத்தில் இருக்கக் கூடிய இறந்த செல்களை நீக்க ரெண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மசாஜ் செய்து ஃபேஸ் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுத்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.

ஆலிவ் எண்ணெயுடன் வெண்ணெய்

சுத்தமான வெண்ணெய் வாங்கி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர விட்டு, பின்னர் துடைத்து எடுத்தால் இன்ஸ்டன்டாக உங்களுடைய முகம் பளிங்கு போல மின்னும்.முகம் அடிக்கடி வறண்டு போனால் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கிரீம் போல முகத்தில் தடவி உலர விட்டு துடைத்தால் நல்ல ரிசல்ட் தெரியும். எப்போதும் ஈரப்பதத்துடன் சருமம் இருக்கும்.

பாவக்காயுடன் வெண்ணெய்

ஒரு பாவக்காயை மிக்ஸியில் அடித்து கூழாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு வெண்ணெயை சேர்த்து கலந்து முகத்தில் தடவி, உலர விட்டால் சருமபிரச்னைகள் பலவும் தீரும். எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் கூட இருக்காது. பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதைச் செய்யலாம்.

You may also like

Leave a Comment

2 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi