ஆடி நிறுவனம், கியூ 8 லிமிடெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. காரின் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 3.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 5.9 நொடிகளில் எட்டும்.
அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லலாம். மைல்டு ஹைபிரிட் காராக இது வெளிவந்துள்ளது. 21 அங்குல அலாய் வீல்கள், பி அண்ட் ஓ சவுண்ட் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், ஆடி பார்க் அசிஸ்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,18,46,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.