ஹோண்டா நிறுவனம், எஸ்பி 125 பைக்கின் ஸ்போர்ட்ஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. கவர்ந்திழுக்கும் வகையி்ல அசத்தலான கிராபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்ட இந்த பைக்கில், குரோம் வண்ணத்துக்கு பதிலாக கருப்பு நிறத்தில் மப்ளர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள எஸ்பி125 வண்ணங்களுடன், நீலம் மற்றும் கிரே நிறங்களில் மெட்டாலிக் வண்ணங்களிலும் இந்த பைக் கிடைக்கும். எல்இடி ஹெட்லாம்ப், எல்இடி டெயில் லாம்ப் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள் உள்ளன.
இந்த பைக்கில் உள்ள 123.94 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 10.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஹோண்டா ரெட் விங்க் ஷோரூம்களில் இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக் கிடைக்கும் எனவும், ஷோரூம் விலையாக சுமார் ரூ.90,567 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.