Thursday, May 16, 2024
Home » அதிமுக எழுச்சி மாநாடு இல்லை; வீழ்ச்சி மாநாடு… புரட்சித் தமிழர் அல்ல; துரோகத் தமிழர் பழனிசாமி: டிடிவி.தினகரன் விமர்சனம்

அதிமுக எழுச்சி மாநாடு இல்லை; வீழ்ச்சி மாநாடு… புரட்சித் தமிழர் அல்ல; துரோகத் தமிழர் பழனிசாமி: டிடிவி.தினகரன் விமர்சனம்

by Nithya

தஞ்சாவூர்: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழன் என்பதற்கு பதிலாக துரோகத் தமிழன் என்ற பட்டம் கொடுத்திருக்கலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்: அப்போது பேசிய அவர்; மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. அவரது கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடாகும். அந்த மாநாட்டில் அதிகபட்சமாக சுமார் 2லிருந்து 2.50 லட்சம் பேர் தான் வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு சைபரை சேர்த்துச் சொல்லியுள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்குப் புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளார்கள். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று அவருக்குப் பட்டம் கொடுக்கலாம். காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்கொண்டும், தனது ஆட்சியை நீட்டிக்கக் காரணமாக இருந்த ஓ.பி.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்குத் துரோகம் செய்து. அவர் தான் செய்த துரோக்தினாலேயும், தவறாக ஈட்டிய பணப் பலத்தாலே, கட்சியை கபளீகரம் செய்த சாதனையால் தான் புரட்சி செய்தார் என்றால், அது வெட்கக்கேடான விஷயமாகும். கட்சியை கவலைகரம் செய்ததுதான் பழனிசாமியின் சாதனை என சாடினார்.

You may also like

Leave a Comment

ten + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi