Thursday, May 2, 2024
Home » ‘டைம்’ அட்டை படத்தில் நடிகை தீபிகா படுகோன்

‘டைம்’ அட்டை படத்தில் நடிகை தீபிகா படுகோன்

by Karthik Yash

புதுடெல்லி: டைம் ஆங்கில பத்திரிகை அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் படம் இடம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிகை, அமெரிக்காவிலிருந்து வெளிவருகிறது. இந்த பத்திரிகையில் வெளிவரும் செய்திகளில் ஒரு நபர் இடம் பெற்றிருந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்த இதழின் அட்டைப் படத்திலேயே இடம்பிடித்து, ‘உலகளாவிய நட்சத்திரங்கள்’ வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவை பொறுத்தவரை காந்தி, நேரு, இந்திராகாந்தி, மன்மோகன்சிங், பிரதமர் மோடி போன்ற அரசியல் தலைவர்கள் உட்பட லட்சுமி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், நடிகை பர்வீன் பாபி, ஐஸ்வர்யா ராய் பச்சன், அமீர்கான் போன்ற பிரபலங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் வரிசையில் தற்போது தீபிகாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே 2018 ம் ஆண்டில், டைம் பத்திரிகையால் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக தீபிகா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அட்டையில் அவரது படம் இடம் பெற்றுள்ளது அவருக்கு மேலும் பெருமையை பெற்று தந்துள்ளது. அவர் அளித்த பேட்டியின்போது, தனக்கு எதிரான அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசும்போது,“ நான் அதைப் பற்றி ஏதாவது சிந்திக்க வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மையில், நான் அதைப் பற்றி எதுவும் பெரிதாக சிந்திப்பதே இல்லை” என்றார்.

You may also like

Leave a Comment

6 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi