புதுடெல்லி: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தனித்துப்போட்டியிடும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பட்நாயக் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பட்நாயக், ‘‘பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வந்து சென்றது மாரியாதை நிமித்தமான சந்திப்பாகும். காங்கிரஸ் மற்றும் பாஜவுக்கு இடையேயான பிஜூ ஜனதா தளத்தின் இடைவெளியானது சமதொலைவில் இருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தனித்து போட்டியிடும்” என்றார்.