Wednesday, May 8, 2024
Home » வெல்லம் வரத்து அதிகரிப்பால் மூட்டைக்கு ரூ.30 சரிவு

வெல்லம் வரத்து அதிகரிப்பால் மூட்டைக்கு ரூ.30 சரிவு

by Ranjith

 

ஈரோடு, மார்ச் 24: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். அதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,600 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,800 மூட்டையும், அச்சு வெல்லம் 650 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டு சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,150 முதல் ரூ.1,260 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,220 முதல் ரூ.1,240 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,230 முதல் ரூ.1,320 வரை என்ற விலையில் விற்பனையானது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெல்லம் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டதால், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.30 வரை விலை குறைந்து விற்பனையானது. அச்சு வெல்லம் கடந்த வாரம் விற்பனையான விலையிலேயே விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

19 − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi