Monday, May 20, 2024
Home » இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்

இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்

by Porselvi

பணி: Lieutenant (Technical Graduate Course) (TGC- 140th).
மொத்த காலியிடங்கள்: 30. சம்பளம்: ரூ.56,100-1,77,500.
வயது வரம்பு: 01.01.2025 தேதியின்படி 20 முதல் 27க்குள்.
தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ டெலிகம்யூனிகேசன்/ ஏவியோனிக்ஸ்/ஏரோநாடிக்கல்/ஏரோஸ்பேஸ்/இன்ஸ்ட்ருமென்டேசன்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியரிங்/ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ரூரல் சிவில் இன்ஜினியரிங்/ என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்/ நானோ டெக்னாலஜி/ஆர்ட்டிபிஷியல் இன்ஜினியரிங்/ மிஷின் லெர்னிங்/ஆட்டோமேஷன் மற்றும் ரொபோடிக்ஸ்/ சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் அல்லது அதற்கு இணையான பாடங்களில் பி.இ.,/பி.டெக்.,

உடற்தகுதி: உயரம்- 157.5 செமீ, உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்- 13, சிட் அப்ஸ்-25, சின்அப்ஸ்-6 மற்றும் செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு 49 வாரம் பயிற்சி வழங்கப்படும்.டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் (இந்தியன் மிலிட்டரி அகடமியில்) ஜனவரி 2025ல் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள், இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியமர்த்தப்படுவர்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 09.05.2024.

You may also like

Leave a Comment

seventeen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi