சென்னை: உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் நியூசிலாந்து – ஆஃப்கானிஸ்தான் மோதும் போட்டியையொட்டி இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களுக்காக இன்று இரவு 12மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயிலில் இலவசமாக ரசிகர்கள் பயணிக்கலாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.