சென்னை: ‘பாரா’ ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம், மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளி, தர்மராஜ் நீளம் தாண்டுதலில் தங்கம், சிவரஞ்சன் பேட்மிட்டன் ஆண்கள் பிரிவில் தங்கம், மனிஷா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெங்கலம், நித்யஸ்ரீ மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம், முத்துராஜ் வெண்கலம் வென்றனர். நேற்று காலை சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.