போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ‘டாய்குன் சவுண்ட்’ என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. டாப் லைன் வரிசையில் அறிமுகமாகியுள்ள இந்தக் காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.
மேனுவல் கியர் பாக்சுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.16.33 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் கொண்டது சுமார் ரூ.17.9 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சி-பில்லர்களில் ‘சவுண்ட் எடிஷன்’ என்ற பேட்ச் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் சப் வூபர் மற்றும் ஆப்ளிபயருடன் கூடிய 7 ஸ்பீக்கர்கள் உள்ளன.