திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அரசு கலை கல்லூரி எதிரே உள்ள பூங்காவுக்கு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசார் தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்துச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை சமுத்திரம் நகர் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள்(32), சஞ்சய்(25), தருமன்(26), கவிதா(42), கல்நகர் பகுதியைச் சேர்ந்த சந்துரு(25) என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிவலப்பாதையில் நடந்த சோதனையில், 5 பெண்கள் உள்பட 8 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது 5 பேர் பிடிபட்டுள்ளனர்.