Thursday, May 16, 2024
Home » விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு: சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல்

விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு: சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல்

by Lavanya

சென்னை: விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு என சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார். விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில்

மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர்: சின்னத்திரை நடிகர் சங்கம்

மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற மனிதநேயர் விஜயகாந்த் என சின்னத்திரை நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு.

ஒளிமிகுந்த நட்சத்திரமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தமிழ்த் திரையுலகில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. அரசியல் களத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து எண்ணற்ற இதயங்களில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். பொது வாழ்வில் அனைவரின் பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment

17 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi