லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இதர பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதி கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றே வழி என்று மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முழு விவரங்களை வெளியிட்டுள்ளதற்கு மாயாவதி வரவேற்பு அளித்துள்ளார்.