அனைத்து உடல் வகைகளும் அழகானவை மற்றும் தனித்துவமானவை. ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்தில் அழகானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உயரமாகவும், பருமனாகவும் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால் அனைவரும் அதே மாதிரியான உடலமைப்புடன் இருப்பதும் இல்லை.இந்த சூழலில் உங்கள் ஆடை மற்றும் அலங்காரங்களில் சில புத்திசாலித்தனமான மாற்றங்களை செய்வதன் மூலம் உங்ளை ஒல்லியாகவும், உயரமாகவும் தோற்றமளிக்க வைக்கலாம். உங்கள் ஆடையின் வடிவங்கள், நீளம், தைக்கும் விதம் மற்றும் சிகை அலங்காரம் முதல் உங்கள் பாதணிகள் வரை உங்கள் அலங்காரத்தில் உள்ள அனைத்தும் உங்கள் தோற்றத்தை மாற்றும். மேலும் இதோ பண்டிகை காலங்கள் துவங்கவிருக்கின்றன. ஆடைகள் வாங்கும் தறுவாயில் இவற்றை எல்லாம் மனதில் கொண்டால் உடைகளைத் தேர்வு செய்வதும் சுலபமாக இருக்கும்.
செங்குத்து கோடிட்ட ஆடைகள்
செங்குத்தாக கோடிட்ட சட்டை அல்லது பேண்ட் மற்றவர்களின் பார்வையுடன் விளையாடுவதற்கான சிறந்த வழியாகும். இது கிடைமட்டமாக இல்லாமல், மேலிருந்து கீழாக கண்ணுக்கு ஒரு மாயைத் தோற்றத்தை அளிக்கிறது. இது உங்களை உயரமாகவும் மெலிதாகவும் தோற்றமளிக்க வைக்கும்.
ஒரே நிறமுடைய ஆடை
ஒரே வண்ணமுடைய அல்லது டோனல் டிரஸ்ஸிங், ஒல்லியான தோற்றத்தை உருவாக்க சிறந்த வழியாகும். மேலிருந்து கீழாக ஒரே நிறத்தைப் பயன்படுத்துவது, மற்றவர்களின் பார்வையுடன் விளையாடுவதற்கான மற்றொரு வழியாகும். இது உங்களை உயரமாகவும், மெலிதாகவும் தோற்றமளிக்க வைக்கும். ஏனெனில் இந்த வகை ஆடை அணியும் போது கண்களுக்கு எந்த கவனச்சிதறலும் ஏற்படுவதில்லை. பேண்ட்டை உயர்த்திப் போடுவது உடலின் கீழ்ப் பகுதி ஆடையை இடுப்பிற்கு மேலே உயர்த்தி அணிவது சிறந்த தந்திரமாகும். ஏனெனில் இது இடுப்பின் மெல்லிய பகுதியில் கவனம் செலுத்துகிறது. இது உங்கள் உடற்பகுதியை மெலிதாகவும், கால்களை நீளமாகவும் தோற்றமளிக்க வைக்கும்.
பெல்ட் அணிவது
உங்கள் இடுப்பில் பெல்ட் அணிவது உண்மையில் உங்கள் உடலின் மிக மெல்லிய பகுதியில் கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும் உங்கள் கால்கள் நீளமாக இருக்கும். இதனால் நீங்கள் ஒல்லியாகவும், உயரமாகவும் தோற்றமளிக்கலாம். அகலமான பெல்ட்டிற்குப் பதிலாக மெல்லிய பெல்ட்டைத் தேர்வு செய்யவும். இல்லையெனில், தோற்றம் முற்றிலும் தவறாகிவிடும். இது உங்களை ஒல்லியாக காட்டுவதற்குப் பதிலாக குண்டாக தோற்றமளிக்க வைக்கும்.
ஃபிளேர்ஸ் ஜீன்ஸ்
ஃபிளேர்ஸ் ஜீன்ஸ் என்பது உங்களை உயரமாகவும், மெலிதாகவும் தோற்றமளிக்க உதவும் ஒரு சிறப்பு ஆடையாகும். உங்கள் இடுப்புடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அகலமாக இருப்பதால், இது உங்களை ஒல்லியாகக் காட்டுவதுடன் ஃபிளேர்ஸ் தரையில் படும் போது, உங்கள் கால்கள் நேரடியாக தரையில் படுவது போன்ற காட்சியளிக்கும்.
சரியான காலணிகள்
பாய்ண்ட்டட் ஹீல் அல்லது வேறு வடிவ ஹீல் கொண்ட எந்த காலணியாக இருந்தாலும் அது உங்கள் சருமநிறத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். இந்த தந்திரம் உங்களை உயரமானவர் போன்ற
மாயத்தோற்றத்தை உண்டாக்கும்.
V-நெக்
உயரமாக தோற்றமளிக்க வைக்க நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய மற்றொரு நவநாகரீக வடிவமைப்பு V நெக்லைன் ஆகும். இது உயரமாக தோற்றமளிக்க வைப்பதுடன், பருமனையும் குறைத்து, உங்களை மெலிதாகக் காட்டுகிறது. கன்னம் பெரிதாக உள்ளவர்கள் மற்றும் தோள்கள் மற்றும் மார்பளவு உள்ளவர்கள் இதனை அவசியம் முயற்சிக்க வேண்டும்.
இன் செய்ய வேண்டும்
மெலிதாகத் தோன்றுவதற்கான மற்றொரு எளிய வழி, உங்கள் சட்டையை இன்செய்து இடுப்பின் அளவை மறைப்பதன் மூலம், உங்களை ஒல்லியாக தோற்றமளிக்க வைக்கிறது.
– பா.கவிதா, சிதம்பரம்.