டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் கிங் டியூராமேக்ஸ் பிளஸ் என்ற ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் வேரியண்ட்களில் கிடைக்கும். முன்புறம் இரட்டை சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. சீட்கள், மூன்று பயணிகள் அமர்ந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. டியூப்லெஸ் டயர்கள், எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோவில் 225 சிசி 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஸ்ஐ இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக 4,750 ஆர்பிஎம்-ல் 7.9 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும். சிஎன்ஜி வேரியண்டில் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்-ல் 6.7 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக பெட்ரோல் வேரியண்ட் சுமார் ரூ.235,552 எனவும், சிஎன்ஜி வேரியண்ட் சுமார் ரூ.2,57,190 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.